TamilsGuide

இசைஞானி இசையில் லெனின் பாண்டியன் முதல் பாடல் வெளியீடு

டி.டி. பாலச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன் தர்ஷன் கணேசன் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் லெனின் பாண்டியன். இப்படத்தில் வளர்ந்து வரும் நடிகை ஸ்ரிதா ராவ் கதாநாயகியாக நடித்துள்ளார்.

பிரபல இசையமைப்பாளரும், இயக்குநருமான கங்கை அமரன் 'துரை ராசு' என்ற முதன்மை கதாபாத்திரத்தில் இப்படத்தில் நடித்துள்ளார். நீண்ட இடைவேளைக்குப் பிறகு நடிகை ரோஜா இப்படத்தின் மூலம் மீண்டும் திரையில் தோன்றுகிறார்.

இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரித்துள்ளது. இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி கவனம் ஈர்த்தது. இந்நிலையில் இப்படத்தின் முதல் பாடலான ‘உன்னை நம்பி’ வெளியாகி உள்ளது. 
 

Leave a comment

Comment