TamilsGuide

படம் பார்த்து கண்கலங்கிய அமீர் கான் - நடிகை சாய் பல்லவிக்கு கிடைத்த பாராட்டு 

தென்னிந்திய அளவில் முன்னணி நடிகையாக வலம் வரும் சாய் பல்லவி தற்போது பாலிவுட் பக்கம் காலடி எடுத்து வைத்துள்ளார். இவர் நடிப்பில் முதலில் வெளிவரவிருக்கும் திரைப்படம் 'Ek Din'.

இப்படத்தில் அமீர் கானின் மகன் ஜுனைத் கானுடன் இணைந்து சாய் பல்லவி நடித்துள்ளார். காதல் கதைக்களத்தில் உருவாகியிருக்கும் இப்படம் வருகிற மே 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்த நிலையில், நேற்று இப்படத்தின் ஸ்பெஷல் ஸ்க்ரீனிங் நடைபெற்றுள்ளது. இதில் அமீர் கான் படத்தை பார்த்துவிட்டு கண்கலங்கியுள்ளார். தனது மகன் நடிப்பையும், சாய் பல்லவியையும் பாராட்டி பேசினார்.

இதில், சாய் பல்லவி குறித்து அமீர் கான் பேசியபோது, "நம் நாட்டில் உள்ள சிறந்த நடிகை சாய் பல்லவி" என கூறினார். இந்திய சினிமாவின் ஜாம்பவான்களில் ஒருவரான அமீர் கான் சாய் பல்லவியை இப்படியொரு வார்த்தை கூறி பாராட்டியது இணையத்தில் வைரலாகி வருகிறது.
 

Leave a comment

Comment