TamilsGuide

நலன் விரும்பிகளுக்கு நன்றி தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி

தாம் சுகவீனமடைந்திருந்த போது தமது நலனுக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவிப்பதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது,

எனது உடல்நிலை குறித்து அறியவந்ததும், நலம் விசாரித்தும் நான் விரைவாகக் குணமடையப் பிரார்த்தித்தும் கிடைக்கப்பெற்ற தொலைபேசி அழைப்புகள் மற்றும் செய்திகளின் எண்ணிக்கை அளவிடற்கரியது.

நான் ஆரோக்கியமாக மீண்டுவர வேண்டும் என நாடு முழுவதும் சர்வமத வழிபாடுகளை முன்னெடுக்க நீங்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் வியப்புக்குரியவையாகும்.

இலங்கை பிரஜைகளாக நீங்கள் மேற்கொண்ட இச்செயற்பாடுகள், நான் விரைவாகக் குணமடைவதற்கு பெரும் தைரியத்தை அளித்தன.

குறிப்பாக, ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் எனக்காக தங்களால் இயன்ற உச்சகட்ட முயற்சிகளை எடுத்ததை நான் அறிவேன்.

என் மீது நீங்கள் காட்டிய அக்கறையையும் ஆர்வத்தையும் மீண்டும் மீண்டும் பாராட்டுகிறேன்.

அதற்காக எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
 

Leave a comment

Comment