பணம் தான் என் நோக்கம், இல்லனா கண்ணதாசனே எழுத விட்ருப்பேன்; கவியரசர் நட்பு குறித்து வாலி சொன்ன ரகசியம்
எஸ்.ஜே.சூர்யாவுடனான பழைய நேர்காணலில், கண்ணதாசன் குறித்தும், அவருடனான நட்பு குறித்தும் வாலி வெளிப்படையாக பேசியுள்ளார்.
க்ளாசிக் தமிழ்’ சினிமாவில் பாடல்களில் ஆளுமை செலுத்தியவர் என்றால் அது கண்ணதாசன் தான். மனித உணர்ச்சிகள் அனைத்திற்கும் தனது பாடல்கள் மூலம் உயிர் கொடுத்த கண்ணதாசன், பிஸியாக பாடல்கள் எழுதிக்கொண்டிருந்த காலக்கட்டத்தில், அவருக்கு போட்டியாக வந்தவர் தான் கவிஞர் வாலி. போட்டியாக வந்தாலும் இருவருக்கும் இடையே நெருங்கிய நட்பு இருந்தது.
கண்ணதாசன் இறந்த சமயத்தில் இரங்கல் கவிதை வாசித்தவர் வாலி தான்.
இதனிடையே எஸ்.ஜே.சூர்யாவுடனான பழைய நேர்காணலில், கண்ணதாசன் குறித்தும், அவருடனான நட்பு குறித்தும் வாலி வெளிப்படையாக பேசியுள்ளார். இதில், கண்ணதாசன் சார் கொடிகட்டி பறந்த காலகட்டத்தில் உள்ள புகுந்து நீங்க பிரளயத்தை உண்டாக்கி இருக்கீங்க, எப்படி அவர் அதை ரெசிவ் பண்ணாரு உங்களை பாத்தாரா பாத்து ஏதாவது சொன்னாரா என்று எஸ்.ஜே.சூர்யா கேட்க, இதற்கு பதில் அளித்த வாலி, கண்ணாதாசன் எனக்கு ஒரு பக்திமானாக அனைத்தில விபோதி குங்ங்கம் இட்ட காலத்தில் இருந்தே தெரியும். ஆனால் அவர் என் முதல் பாட்டையே பிரமாதமாக பாராட்டினார்.
கற்பகம் படத்தின் 100-வது நாள் விழா அசோக ஹோட்டலில் நடைபெற்றது. அப்போது என் பாடலை பற்றி பிரமாதகமாக பேசினார். அதே சமயம் வேலை தொடர்பாக இருவருக்கும் மோதல் இருந்தது. இது பணத்தோடு தொடர்புடையது. எனக்கே பணம் வராது என்று தெரிந்தால் அந்த பாடலை நீ எழுதிவிடு என்று சொல்லிவிடுவேன். பாட்டுக்கு பணம் இல்லை என்றால் எல்லா பாட்டும் கண்ணதாசனே எழுதட்டும், எனக்கு எந்த ஆச்சியபனையும் இல்லை என்று சொல்லி இருப்பேன். நான் பாட்டு எழுதினால் அவருக்கும் நஷ்டம் ஆகும்.
அதே சமயம் அவர் எழுதும் பாடல்களில் என் சாயல் இருந்தால் அதை மாற்றி தருகிறேன் என்று சொல்வார். எஸ்.பி.முத்துராமனிடம் பாடல் எழுதும்போது வாலி ஒன்றையும் விட்டுவைக்கமாட்டான். அப்படி அவன் எழுதியது ஏதாவது நான் எழுதி இருந்தால் கொடு மாற்றி தருகிறேன் என்று சொல்லியிருக்கிறார். இந்த அளவுக்கு எங்களுடைய நட்பு ஆரோக்கியமாக இருந்தது. ஆனால் அவரது இருந்த அரசியல் தரப்பு என் அரசியல் தரப்பும் மோதிக்கொண்டது. எம்.ஜி.ஆர் இருந்ததால் நான் தி.மு.க.வில் இருந்தேன். காமராஜரை பின்பற்றி அவர் காங்கிரஸில் இருந்தார். இது தான் எங்களுக்குள் இருந்த வேறுபாடு.
நாஙகள் இருவரும் மேடையில் ஒருவரை ஒருவர் திட்டிக்கொள்வோம். ஆனால் இரவில் நாங்கள் இருவரும் ஒன்றாக சித்ராலயாவில் சந்திப்போம் என்று கவிஞர் வாலி கண்ணதாசன் கூறித்து எஸ்.ஜே.சூர்யா உடனான ஒரு நேர்காணலில் கூறியுள்ளார்.
தமிழச்சி கயல்விழி


