TamilsGuide

போலி ஆவணங்களைப் பயன்படுத்தி நிதி மோசடியில் ஈடுபட்ட சந்தேகநபர் கைது

போலி அடையாள அட்டை மற்றும் போலி ஓட்டுநர் உரிமத்தைப் பயன்படுத்தி நிதி மோசடிகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நேற்று (25) இரவு, யக்கல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெலும்மஹர பகுதியில் கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது இந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதவேளை, சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர் கம்பஹா பகுதியைச் சேர்ந்த 60 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடி செய்தமை தொடர்பில், மாரவில நீதவான் நீதிமன்றத்தினால் இவருக்கு எதிராக திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தமை பொலிஸாரின் மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் தொடர்பான மேலதிக விசாரணைகளை யக்கல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment

Comment