TamilsGuide

ஏஜிஎஸ் 28 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது

'கோட்', 'லவ் டுடே', 'டிராகன்' மெகா வெற்றிப் படங்களை தொடர்ந்து ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் 'ஆக்ஷன் கிங்' அர்ஜுன், அபிராமி, பிரீத்தி முகுந்தன் நடிக்கும் 'ஏஜிஎஸ் 28' என பெயரிப்பட்டு இருந்தது.

குடும்பத்துடன் பார்த்து ரசிக்கக்கூடிய வகையில் உருவாகி உள்ள இப்படத்தை புதுமுக இயக்குநர் சுபாஷ் கே. ராஜ் இயக்கி உள்ளார். இவர் பிரதீப் ரங்கநாதனின் உதவி இயக்குநர் ஆவார். அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய, பிரதீப் E ராகவ் படத்தொகுப்பை மேற்கொண்டார். 'கே.ஜி.எஃப்' புகழ் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் இப்படத்திற்கு இசை அமைத்ததன் மூலம் தமிழில் அறிமுகமாகி உள்ளார்.

ஜான் கொக்கென், விவேக் பிரசன்னா, அர்ஜுன் சிதம்பரம் ஆகியோர் நடித்துள்ள இப்படத்தின் தலைப்பு குறித்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படத்தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, அர்ஜூன், அபிராமி, பிரீத்தி முகுந்தன் நடித்து வரும் படத்திற்கு ப்ளாஸ்ட் (Blast) என பெயரிடப்பட்டுள்ளது. மேலும் மிக விரைவில் இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இப்படத்தின் அப்டேட்கள் இனி வரும் நாட்களில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a comment

Comment