கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்தின் முன்னால் உள்ள போக்குவரத்து சமிஞ்சை விளக்கு மீது ஏறிய ஒருவர் இன்று காலை பொலிசார் மற்றும் தீயணைப்பு படையினரால் மீட்கப்பட்டார்.
அவர் தொங்கிக்கொண்டிருந்த துணி திடீரென கிழிந்ததால் போக்குவரத்து சமிஞ்சை விளக்கின் கீழே அமைக்கப்பட்டிருந்த காற்றடைக்கப்பட்ட மீட்பு மெத்தை மீது பாதுகாப்பாக விழுந்தார்.
‘தயவுசெய்து அடிக்காதீர்கள்’ என அவர் கோரிக்கை விடுத்ததையடுத்து ,பொலிஸ் அதிகாரிகள் அவருக்கு ஆறுதல் கூறி, அந்த இடத்திலிருந்து அழைத்துச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.


