TamilsGuide

மட்டக்களப்பு - 5 மில்லியன் ரூபா செலவில் பாரிய வடிகால் அமைப்புப் பணி ஆரம்பம்

மட்டக்களப்பு மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட களுவாஞ்சிக்குடி சரஸ்வதி வித்தியாலய வீதி வழமையாக மழை காலங்களில் முற்றாக பாதிக்கப்பட்ட நிலையில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜின் திட்ட முன்மொழிவுக்கமைய, PSDG வேலைத்திட்டத்தின் கீழ் 05 மில்லியன் செலவில் 277மீற்றர் நீளமான வடிகான் அமைக்கும் வேலைத்திட்டம் இன்று ( 24 ) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ், பிரதேச சபை உறுப்பினர்கள், கிராம உத்தியோகத்தர்கள், பொது நிர்வாக அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்
 

Leave a comment

Comment