தமிழ் திரையுலகை வியாபித்திருந்த காதல் மன்னன் ஜெமினி கணேஷ் அவர்களின் பங்களா.
பங்களாவின் பெயர் Red Lynch
Redlynch என்பது இங்கிலாந்தின் சோமர்செட் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தின் பெயர். ஆனால் கோடைக்கானலில், Red Lynch என்பது ஏரிக்குப் மேலே அமைந்திருந்த ஒரு அழகிய இல்லத்தின் பெயர்.
அந்த பாரம்பரிய வீடு பல கரங்கள் மாறி ஜெமினியின் கை வசமானது சுவாரஸயம். ஒருகாலத்தில் கேரளாவின் பீர்மேடு பகுதிகளில் தேயிலை, ரப்பர் மற்றும் ஏலக்காய் தோட்டங்களை உருவாக்கிய வின்சென்ட் சகோதரர்கள் வசம் இருந்தது இந்த வீடு. அவர்களின் சகோதரி வேரா வின்சென்ட், 1950களில் அங்கே வசித்து வந்தார்.கேதரினுக்கு முன் அது W.E. ஸ்காட் என்பவருடையது. அவர் அமெரிக்க மிஷனரியாக இருந்திருக்கலாம்.
கேதரின் வேரா வின்சென்ட் டிடமிருந்து எரிக் ஹேவர்டு வாங்கினார்.
ஹேவர்டு அந்த இடத்தை அழகாக வடிவமைத்து, தோட்டம், காடு, புல்வெளி மற்றும் பழத்தோட்டங்கள் நிறைந்ததாக மாற்றினார். ஹேவர்டு தனது இறுதி நாட்களை அங்கே கழிக்க விரும்பினார்; ஆனால் குடும்பத்தின் வற்புறுத்தலால் இங்கிலாந்து திரும்ப வேண்டிய சூழல் ஏற்பட்டது.
அந்த சமயத்தில் ஒரு திரைப்படப் படப்பிடிப்பிற்காக கோடைக்கானலில் ஜெமினி கணேசன் இருந்தபோது, இந்த வீடு விற்பனைக்கு இருப்பதாக தெரியவந்தது.
உடனடியாக அவர் ஹேவர்டுக்கு கடிதம் எழுதுகிறார்.
Dear Mr Hayward,
நான் சமீபத்தில் கோடைக்கானலில் உங்கள் Red Lynch இல்லத்தைப் பார்த்தேன். அது என்னை மிகவும் கவர்ந்தது. இந்த வீடு என் மனதில் ஏற்கனவே இடம் பிடித்துவிட்டது. அதை நீங்கள் விற்க நினைத்தால், தயவு செய்து எனக்கு விற்பனை செய்யுங்கள்.
ஜெமினி கணேசன்
குறிப்பு: இப்படியான அழகான வீட்டை நீங்கள் எப்படிக் விற்க முடிகிறது?
“எவ்வளவு விலையாயினும், இந்த வீடு ஜெமினி கணேசனுக்கே செல்ல வேண்டும்.” என தனது மேலாளரிடம் ஹேவர்டு கண்டிப்பாய் சொல்லிவிட பங்களா ஜெமினிவசம் வந்தது.
காலத்தின் ஓட்டத்தில் உள்ளிருந்த எத்தனையோ அரிய மரங்கள் அழிந்து விட்டாலும் இன்றும் உயிருடன் நிற்கிறது — ஒவ்வொரு பருவத்திலும் நிறம்மாறுஅருகிலிருந்த செம்பொன் பீச் மரம்.
பங்களா வாசலில் உள்ள பெயர்ப்பலகை - ஜெமினி கணேஷ்
சாலையின் பெயர்ப்பலகை சொல்கிறது 'Savithri Road'.
Red Lynch - நினைவுகளின் ஓவியம்
*****************
Ramadevi Rathinasamy


