TamilsGuide

பிரேமலால் ஜயசேகர பிணையில் விடுதலை

நுவரெலியா குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முன்னாள் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர  பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் தனது குடும்பத்தினருடன் கடந்த (21) ஆம் திகதி நுவரெலியாவிற்கு சுற்றுலா சென்றிருந்த நிலையில் , அங்கு வருகைதந்த இனொரு தரப்பினருடன் ஏற்பட்ட மோதலின் போது, தனது கைத்துப்பாக்கியைக் காட்டி ஒருவரை அச்சுறுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டார்.
 

Leave a comment

Comment