TamilsGuide

கனடாவில் அதிகரித்துவரும் உணவுப்பொருட்கள் விலை

ஈரான் போரால் கனடாவில் உணவுப்பொருட்கள் விலைகள் உயர்ந்துவருகின்றன.

குறிப்பிடத்தக்க வகையில், காய்கறிகள் விலைகள் கணிசமாக உயர்ந்துள்ளன!

கனடாவில் மூன்று ஆண்டுகளில் இல்லாத வகையில், காய்கறிகள் விலை உச்சம் தொட்டுள்ளதாக கனடா புள்ளியியல் அலுவலகத் தரவுகள் தெரிவிக்கின்றன.

கனடாவில், பணவீக்க விகிதம் மார்ச் மாதத்தில் 2.4 சதவிகிதமாக அதிகரித்தது. ஈரான் போர் மற்றும் ஹோர்முஸ் ஜலசந்தி மூடல் ஆகியவை அதற்குக் காரணமாக அமைந்தன.

உணவுப்பொருட்கள் விலையோ மார்ச் மாதத்தில் எக்கச்சக்கமாக உயர்ந்தது. பிப்ரவரி மாதத்தில் கடைகளில் வாங்கப்படும் உணவுப்பொருட்கள் விலை 4.1 சதவிகிதம் உயர்ந்த நிலையில், மார்ச் மாதத்திலோ, 4.4 சதவிகிதமாக உயர்ந்தன.

அதிகபட்சமாக, காய்கறிகள் விலை மார்ச் மாதத்தில் 7.8 சதவிகிதம் உயர்ந்துள்ளது. பிப்ரவரியை ஒப்பிடும்போது, இது மிகப்பெரிய விலை உயர்வு ஆகும். ஏனென்றால், பிப்ரவரியில் காய்கறிகள் விலை 0.5 சதவிகிதம்தான் உயர்ந்தது.

குறிப்பாக, வெள்ளரிக்காய், குடை மிளகாய், செலரி போன்றவை அதிகம் விலை உயர்ந்துள்ளன.

விடயம் என்னவென்றால், பொதுவாக கனடாவில் காய்கறிகள் விளையும் பருவத்தில் காய்கறி விலை குறையும். ஆனால், உர விலை அதிகரித்துள்ளதால், இம்முறை உணவுப்பொருட்கள் விலை உயர்ந்தேதான் இருக்கும் என்கிறார் துறைசார் நிபுணர் ஒருவர்.

ஈரான் போர் எவ்வளவு நீடிக்கிறதோ, கனடாவின் பணவீக்கமும் அதேபோல் அதிகரிக்கும் என்கிறார் அவர். 

Leave a comment

Comment