TamilsGuide

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் 7ஆண்டுகள் பூர்த்தி – நாட்டின் பல தேவாலயங்களில் விசேட ஆராதனைகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் 7 ஆண்டுகள் பூர்த்தியாகின்ற நிலையில் தாக்குதலில் உயிரிழந்த காயமடைந்த மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்காக நாட்டின் பல்வேறு தேவாலயங்களிலும் விசேட ஆராதனைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான இலக்காக காணப்பட்ட கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் பிரதான ஆராதனை நிகழ்வு இடம்பெற்றது.

அத்துடன் உயித்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து இன்று காலை 8.45 க்கு அனைத்து தேவாலயங்களிலும் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதேவேளை உயிரிழந்தவர்களுக்கான நீதியை வலியுறுத்தி, இன்று மாலை 4 மணிக்கு நீர்கொழும்பு மேரி ஸ்டெல்லா கல்லூரி மைதானத்திலிருந்து கட்டுவாப்பிட்டி தேவாலயம் வரை பிரார்த்தனைப் பேரணி நடைபெறவுள்ளது

கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான இலக்காக காணப்பட்ட கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் பிரதான ஆராதனை நிகழ்வு இடம்பெற்றது

கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் ஆராதனை நிகழ்வு இடம்பெற்றது

தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து காலை 8.45 க்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது. 

நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய புனித செபஸ்தியன் தேவாலயம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் மற்றுமொரு இலக்காக காணப்பட்ட நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய புனித செபஸ்தியன் தேவாலயத்திலும் இன்று காலை ஆராதனை நிகழ்வு இடம்பெற்றது

உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் இதில் கலந்து கொண்டிருந்தனர். 

மட்டக்களப்பு சீயோன் தேவாலயம்

அத்துடன் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் இலக்குவைக்கப்பட்ட மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்திலும் இன்று காலை ஆராதனை நிகழ்வு இடம்பெற்றது.

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்திற்கு இன்று பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.

மேலும் மட்டக்களப்பு நகரில் விசேட பாதுகாப்பு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருந்ததுடன் முப்படையினரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தனர். மட்டக்களப்பு பிள்ளையாரடியில் உள்ள சீயோன் தேவாலயத்திலும் ஆலய பங்குத் தந்தை ரோஷன் மகேசன் தலைமையில் இன்று விசேட ஆத்ம சாந்தி திருப்பலி பூஜை வழிபாடுகள் இடம் பெற்றது.

இதேவேளை உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்த காயமடைந்த மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்காக நாட்டின் பல்வேறு தேவாலயங்களிலும் விசேடஆராதனை நிகழ்வுகள் இடம்பெற்றன.
 

Leave a comment

Comment