• Welcome to TamilsGuide
செய்திகள் 1

யாழில் போலி காணி உறுதி தயாரிப்பு – சந்தேகநபர் கைது

இலங்கை

2025ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் – வண்ணார்பண்ணை பகுதியில் 161 பரப்பு காணியை உரிமை மாற்றம் செய்வதற்கு போலி உறுதி தயாரிக்க உதவிய சந்தேகநபர் ஒருவர் நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த காணியானது போலி உறுதி மூலம் உரிமை மாற்றம் செய்யப்பட்டதாக பொலிஸாரிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

அந்தவகையில் யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதி பகுதியில் வைத்து, யாழ்ப்பாணம் மாவட்ட நிதி மோசடி பிரிவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கற்பிட்டி பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

அவரிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
 

Leave a Reply