TamilsGuide

அதிகவேக நெடுஞ்சாலைகள் மூலம் 441 மில்லியன் ரூபா வருவாய்

2026 ஏப்ரல் 10 முதல் 18 வரையிலான எட்டு நாள் வரையான தமிழ்-சிங்கள புத்தாண்டு காலத்தில், இலங்கையின் அதிவேக நெடுஞ்சாலைகள் மூலமாக  441 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான வருவாயை ஈட்டியுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை (RDA) தெரிவித்துள்ளது.

இந்தக் காலகட்டத்தில் மொத்தம் 1,170,830 வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தியதாக RDA பணிப்பாளர் நாயகம் ஆர்.டி.ஏ அனுராதா ஹெட்டியாராச்சி குறிப்பிட்டார்.

பண்டிகைக் காலம் தொடங்கிய ஏப்ரல் 10 ஆம் திகதி, அதிவேக நெடுஞ்சாலைகளில் இருந்து 161,847 வாகனங்கள் வெளியேறியதன் மூலம், அதிகபட்ச போக்குவரத்து அளவு பதிவானது.

அன்றைய தினம் மாத்திரம் ரூ. 59,815,450 என்ற அதிகபட்ச வருவாய் ஈட்டப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
 

Leave a comment

Comment