TamilsGuide

மனதளவில் பாதிக்கப்பட்ட தருணம்- ஆர்.ஜே.பாலாஜி

சூர்யா - திரிஷா நடிப்பில் ஆர்.ஜே.பாலாஜி எழுதி, இயக்கியுள்ள புதிய படம், 'கருப்பு' இந்தப் படம் மே மாதம் திரைக்கு வருகிறது.

இந்த படம் தொடங்கிய நாளில் இருந்தே பல விமர்சனங்கள் எழுந்தன. படத்தின் ரிலீஸ் தேதிகளும் தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது. ஒருவழியாக தற்போது ரிலீஸ் தேதி அரிவிக்கபட்டுள்ளது.

'காட் மோட்...' பாடலை தொடர்ந்து, இந்தப் படத்தின் 2-வது பாடலான 'நாங்க நாலு பேரு...' பாடல் வெளியானது. ஆனாலும் இந்தப் பாடலுக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.

இதுபற்றி பேசியுள்ள ஆர்.ஜே.பாலாஜி, 'நாங்க நாலு பேரு...' பாடல் படத்தில் இடம்பெறாது. அதை 2-வது பாடலாக வெளியிடலாம் என படக்குழுவினர் சொன்னதை கேட்டு வெளியிட்டோம். ஆனால் அடி அடி என அடித்துவிட்டார்கள். சூர்யா ரசிகர்களும் அப்படி செய்ததால் நானும், இசையமைப்பாளர் சாய் அபயங்கரும் மனதளவில் பாதிக்கப்பட்டோம், என்றார்.
 

Leave a comment

Comment