TamilsGuide

அமெரிக்கா லூசியானாவில் துப்பாக்கிச்சூடு - 8 குழந்தைகள் பலி - துப்பாக்கிச்சூடு நடத்தியவர் சுட்டுக் கொலை

 அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் உள்ள ஸ்ரெவ்போர்ட் பகுதியில் இந்திய நேரப்படி இன்று மாலை நடந்த துப்பாக்கிச்சூட்டில் 8 சிறார்கள் கொல்லப்பட்டனர்.

வீதியில் வைத்து மர்ம நபர் நடத்திய இந்த துப்பாக்கிச்சூட்டில் 1 முதல் 14 வயதுடைய மொத்தம் 10 குழந்தைகள் மீது குண்டு பாய்ந்துள்ளது. அதில் 8 பேர் உயிரிழந்தனர்.

சம்பவத்தின் பின் அங்கிருந்து ஒரு காரை திருடி தப்பிக்க முயன்ற அந்த நபரை போலீசார் துரத்திச் சென்று சுட்டுக் கொன்றனர்.

துப்பாக்கிச்சூடு நடத்தியது அந்த ஒரு நபர்தான் என உறுதி செய்த அதிகாரிகள், கொல்லப்பட்ட அந்த நபரின் அடையாளத்தை வெளியிடவில்லை.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. காயமடைந்த சிறார்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சுடப்பட்ட சிறுவர்களில் ஓரிருவர் அந்த நபருக்கு உறவுமுறை என்ற அதிகாரிகள் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a comment

Comment