TamilsGuide

ஹோர்முஸ் நீரிணை விவகாரத்தில் டிரம்ப் வெளியிட்ட முக்கிய தகவல்

உலக நாடுகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் ஹோர்முஸ் நீரிணையை இனிவரும் காலங்களில் ஒருபோதும் மூடப்போவதில்லை என ஈரான் உறுதியளித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

தனது 'Truth Social' சமூக ஊடகப் பக்கத்தில் இவ்விடயம் தொடர்பில் பதிவு ஒன்றை அவர் பதிவிட்டுள்ளார்.

குறித்த பதிவில், ஹோர்முஸ் நீரிணையை இனிவரும் காலங்களில் உலக நாடுகளுக்கு எதிரான ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தப் போவதில்லை என ஈரான் வாக்குறுதி அளித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

கடந்த காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட தீவிர இராஜதந்திர பேச்சுவார்த்தைகளின் பெறுபேறாகவே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அமெரிக்க நிர்வாகம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

சர்வதேச எரிசக்தி விநியோகம் மற்றும் வர்த்தகப் போக்குவரத்து ஆகியவற்றில் மிக முக்கியமான இந்தப் பாதை, தடையின்றி திறந்திருப்பது சர்வதேச ரீதியில் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு மிக அவசியமானதாகும்.

இந்த இணக்கப்பாட்டின் மூலம் பிராந்திய கடல்சார் போக்குவரத்து மற்றும் கப்பல்களின் பாதுகாப்பு இனிவரும் காலங்களில் மேலும் உறுதிப்படுத்தப்படும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

குறிப்பாக, மசகு எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றிச் செல்லும் கப்பல்கள் எவ்வித தடையுமின்றி இந்தப் பாதையை பயன்படுத்துவதற்கான சூழல் இதன் மூலம் உருவாகியுள்ளது.

சர்வதேச சந்தையில் எரிபொருள் விலையில் நிலவும் நிச்சயமற்ற தன்மையை நீக்கி, பொருளாதார வளர்ச்சியை சீர்படுத்த இந்தத் தீர்மானம் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a comment

Comment