இங்கிலாந்தில் இடம்பெற்ற மோசடி சம்பவம் ஒன்று பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் எச்சரிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது. 38 வயதான சமந்தா பிராட்ஷா (Samantha Bradshaw) என்ற பெண், போலி பொலிஸ் அதிகாரிகள் மற்றும் வங்கி ஊழியர்களாக நடித்த மோசடிக்காரர்களால் சுமார் £11,000 இழந்துள்ளார்.
Derbyshire பகுதியில் உள்ள Alfreton நகரில் வசிக்கும் அவர், தன்னை NatWest வங்கியின் மோசடி தடுப்பு குழுவினரும், Merseyside Police அதிகாரிகளும் தொடர்பு கொண்டதாக நம்பினார். மோசடிக்காரர்கள் மிகுந்த நம்பகத்தன்மையுடன் பேசி, அவரை ஏமாற்றினர்.
இதன் பின்னர், போலி நபர் ஒருவர் நேரடியாக அவரது வீட்டிற்கு வந்து, வங்கி அட்டைகளை பெற்றுச் சென்றுள்ளார். இதனால், சில மணி நேரங்களுக்குள் அவரது கணக்கிலிருந்து பெரும் தொகை பணம் திருடப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து Derbyshire Police தெரிவித்ததாவது, “இத்தகைய மோசடிகள் தற்போது அதிகரித்து வருகின்றன. எந்த வயதினரையும் குறிவைத்து இவை நடைபெறக்கூடும்” என எச்சரித்துள்ளனர்.
தனது அனுபவத்தை பகிர்ந்த Samantha Bradshaw, “என் வீட்டிற்கு நேரடியாக ஒருவர் வந்தது மிகவும் பயமுறுத்தியது. பின்னர் உண்மையான போலீசாரிடம் பேசும்போது அவர்கள் பாதுகாப்பாக இருக்க கதவுகளை பூட்டிக்கொள்ளுமாறு கூறினர்” என்றார்.
இந்த சம்பவம் குறித்து அவர் மிகுந்த மன அழுத்தம் அனுபவித்ததாகவும், இதுபோன்ற மோசடிகளைத் தவிர்க்க மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.


