நடிகை ஹன்சிகா மும்பையை சேர்ந்த தொழிலதிபர் சொஹைல் கத்துறியா என்பவரை 2022ல் திருமணம் செய்து கொண்டார்.
ஆனால் அவர்கள் திருமணம் முடிந்து சில காலத்திலேயே பிரிந்துவிட்டனர். அவர்கள் தனியாக வாழ்ந்து வந்த நிலையில் 2026 மார்ச்சில் சட்டப்படி விவாகரத்து பெற்றுக்கொண்டனர்.
இந்நிலையில் ஹன்சிகா முதல் முறையாக விவாகரத்து பற்றி பேசி இருக்கிறார். "என் குடும்பம் என்னை எதற்காகவும் அழுத்தம் கொடுக்கவில்லை. நான் எதற்காகவும் வருத்தப்படவில்லை."
"தவறான ரயிலில் ஏறிவிட்ட பின் கஷ்டப்படுவதை விட அதில் இருந்து இறங்கிவிடுவது தான் சிறந்தது. அதனால் இது பரவாயில்லை. நான் வருத்தப்படவில்லை. குடும்பத்தின் ஆதரவு இருக்கிறது. தற்போது மகிழ்ச்சியாக இருக்கிறேன்" என ஹன்சிகா கூறி இருக்கிறார்.


