TamilsGuide

இஸ்ரேல்-லெபனான் போர் நிறுத்தம் எதிரொலி - ஹார்மூஸ் நீரிணையை திறந்தது ஈரான்

ஈரான், அமெரிக்கா-இஸ்ரேல் போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி போக்குவரத்து பாதிப்பு அடைந்துள்ளது. இதனால் உலகளாவிய எண்ணெய் தட்டுப்பாடு சூழல் ஏற்பட்டுள்ளது.

வர்த்தக கப்பல் போக்குவரத்துக்கு ஏதுவாக ஈரான் தனது ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க வேண்டும் என இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் வலியுறுத்தி வந்தன.

இதற்கிடையே, இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே பத்து நாட்கள் தற்காலிக போர் நிறுத்தம் செய்ய இரு நாடுகளும் ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார். இந்த நடவடிக்கை பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்ட உதவும் என்று டிரம்ப் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டார்.

இந்நிலையில், இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ள நிலையில் ஹார்மூஸ் நீரிணை திறக்கப்படுகிறது என ஈரான் தெரிவித்துள்ளது.
 

Leave a comment

Comment