காணி நிர்ணயத் திணைக்களத்தினுடைய கோரிக்கைக்கமைவாக நில அளவைத் திணைக்களத்தினால் தையிட்டி பகுதியில் காணியை அளவீடு செய்யும் பணிகள் இன்றைய தினம் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டிருந்தது.
அதன் போது, அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைத்த வகையில் காணி அளவீடு செய்ய வேண்டுமென புத்தசாசன அமைச்சின் செயலாளரினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக, மே மாதம் 15 ஆம் திகதிக்கு இடையில் அனைத்து பங்குதாரர்களையும் இணைந்த வகையில் தையிட்டி காணி அளவீடு செய்வதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என யாழ்ப்பாண மாவட்ட செயலர் மேலும் தெரிவித்துள்ளார்.
தையிட்டி விகாரை காணியை அளவீடு செய்து வரைபடங்களை தயாரிக்க வேண்டும் என கடந்த சனிக்கிழமை காணி உரிமையாளர்களை மாவட்ட செயலகத்திற்கு அழைத்து மாவட்ட செயலரும் , கடற்தொழில் அமைச்சரும் இணைந்து கலந்துரையாடி , இன்றைய தினம் காணிகளை அளவீடு செய்வது என தீர்மானித்திருந்தனர்.
இந்நிலையில் , விகாரை காணியை சட்டவிரோதமாக அளவீடு செய்ய முயற்சிப்பதாக , தையிட்டி விகாரை விகாராதிபதி பலாலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த நிலையில் , இன்றைய தினம் முன்னெடுக்கப்படவிருந்த காணி அளவீட்டு பணிகள் இடைநிறுத்தப்பட்டமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே மாவட்ட செயலர் மேற்கண்டவாறு தெரிவித்து இருந்தார்.


