TamilsGuide

மீண்டும் ஆரம்பமான எண்ணெய் விநியோகம் - தென்கொரியா எடுத்த அதிரடி முடிவு

ஈரானின் ஹோர்முஸ் நீரிணை முடக்கத்திற்குப் பின்னர், சவூதி அரேபியாவிலிருந்து மசகு எண்ணெய்யை ஏற்றிக்கொண்டு முதலாவது தென்கொரிய கப்பல் செங்கடல் ஊடாகப் பயணத்தை ஆரம்பித்துள்ளதாகத் தென்கொரிய கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் சூழலால் ஹோர்முஸ் நீரிணை முடக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்தப் பிராந்தியத்திலிருந்து தென்கொரியாவுக்கு எண்ணெய் விநியோகம் நிறுத்தப்பட்டிருந்தது.

பல வாரங்களுக்குப் பின்னர் தற்போது மீண்டும் குறித்த தாங்கி கப்பல் புறப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மத்திய கிழக்கு மோதல்கள் ஆரம்பமானது முதல் தென்கொரியாவில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்கு அந்நாட்டு அரசாங்கம் பல்வேறு மாற்று நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment