TamilsGuide

இங்கிலாந்து மருத்துவ துறையில் இருந்து நீக்கப்பட்ட இந்திய வம்சாவளி பெண்

இங்கிலாந்தில் நோயாளிகளின் ஆங்கிலத்தைப் புரிந்துகொள்ளத் தவறியதால், இந்திய வம்சாவளி பெண் ஒருவர் மருத்துவ துறையில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாட்டை சேர்ந்த சாய் கீர்த்தனா மொழிச் சிக்கல்கள் காரணமாக நோயாளிகளையும் சக ஊழியர்களையும் புரிந்துகொள்வதில் சிரமப்பட்டதால், பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

அவர் அக்டோபர் 2023-ல் யார்க் மற்றும் ஸ்கார்பரோ போதனா மருத்துவமனைகள் NHS அறக்கட்டளையில் சேர்ந்திருந்தார்.

அறிக்கைகளின்படி, அவர் பணியில் சேர்ந்த சில வாரங்களிலேயே நோயாளிகள் மற்றும் ஊழியர்களுடனான உரையாடல்களைத் தொடர்வதில் அவர் சிரமப்பட்டதாக சக ஊழியர்கள் குறிப்பிட்டனர்.

நவம்பர் மாதம் நடைபெற்ற ஒரு ஆய்வுக் கூட்டத்தில், தனது வேலை விண்ணப்பத்தில் ஆங்கிலம் தனது தாய் மொழி என குறிப்பிட்டிருந்தாகவும் , ஆனால் பிற்பாடு தெலுங்கே தனது தாய்மொழி என்பதை சாய் கீர்த்தனா ஒப்புக்கொண்டார்.

மேலும், பணியமர்த்தல் செயல்முறையின் போது, நேர்காணல் கேள்விகளை வாய்மொழியாகக் கேட்பதற்குப் பதிலாக ஒரு அரட்டைப் பெட்டியில் (chat box) தட்டச்சு செய்யுமாறு சாய் கீர்த்தனா கோரியதாகவும், இந்தக் கோரிக்கை அசாதாரணமானது என்றும் அவரது மேலாளர் குழுவிடம் தெரிவித்தார்.

இருப்பினும், "முதல் மொழி" என்பது அன்றாட வாழ்வில் பயன்படுத்தப்படும் முதன்மை மொழியைக் குறிக்கிறது, கல்வி பயிற்று மொழியை மட்டுமல்ல என்று கூறி, குழு அவரது விளக்கத்தை நிராகரித்தது.

விண்ணப்பப் படிவத்தில் அவர் கூறிய கூற்று தவறாக வழிநடத்துவதாகவும், அவரது மொழித் திறமையின்மையை மறைப்பதற்கான ஒரு முயற்சியாகவும் அமைந்தது என்று தீர்ப்பாயம் முடிவு செய்தது. இதன் விளைவாக, சாய் கீர்த்தனா 2024 ஜூன் மாதம் பணியிலிருந்து நீக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

இங்கிலாந்திற்கு  மட்டுமல்லாது  வெளிநாடுகளுக்கு   வேலை தேடி செல்பவர்கள் தாம் செல்லும் நாடு மக்களின்  மொழி உச்சரிப்பை  சரியாக   தெரிந்திருக்க வேண்டும் என்பதை   , இந்திய பெண்ணின்  பணிநீக்ம் வலியுறுத்துகின்றது.  

Leave a comment

Comment