TamilsGuide

அஜித்தின் பிறந்த நாளன்று ரீ-ரிலீஸாகும் பில்லா

நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளியான பிளாக்பஸ்டர் படமான 'பில்லா' (2007), மீண்டும் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

நடிகர் அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு, நவீன 4K தொழில்நுட்பத்தில் மெருகேற்றப்பட்டு மே.1ஆம் தேதி வெளியாக உள்ளது. தமிழ்நாடு முழுவதும் சுமார் 150-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இப்படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் வெளியான இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றன. 

இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா, நமீதா ஆகியோர் நடித்திருந்தனர். இது ரஜினி படத்தின் ரீமேக்காக இருந்தாலும், அஜித்தின் நடிப்பும், படத்தை ஸ்டைலிஷாக எடுத்திருந்த விதமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இப்படம் கடந்த 2021ஆம் ஆண்டும் ரீ-ரலீஸ் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 
 

Leave a comment

Comment