தமிழ்-சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு நாடு முழுவதும் நடத்தப்பட்ட விசேட சோதனைகளில் 400க்கும் மேற்பட்ட வர்த்தகர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் (PHI) தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 1 முதல் 12 வரை மேற்கொள்ளப்பட்ட சுமார் 2,000 சோதனைகளில் 12,000-க்கும் மேற்பட்ட வர்த்தக நிலையங்கள் சோதனை செய்யப்பட்டதாக சங்கத்தின் பொதுச் செயலாளர் சமில் முத்துகுடா குறிப்பிட்டார்.
இதன்போது, சுகாதாரத்திற்குக் கேடு விளைவிக்கும் வகையில் உணவுப் பொருட்களை விற்பனை செய்தல் மற்றும் காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்தல் போன்ற குற்றங்களுக்காக இந்த வர்த்தக நிலையங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டன.
எதிர்வரும் வெசாக் மற்றும் பெளர்ணமி பண்டிகைகளை அடிப்படையாகக் கொண்டும் இதுபோன்ற சோதனைகள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.


