• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கருப்பன் தேயிலை மரம் சாய்ந்ததில் குடியிருப்பு ஒன்றுக்கு சேதம்

இலங்கை

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா புளியாவத்த தோட்ட பகுதியில் பாரிய கருப்பன் தேயிலை மரம் ஒன்று அடியோடு முறிந்து குடியிருப்பு ஒன்றின் மீது விழுந்ததில் குடியிருப்புக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று மாலை 3.30மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

குறித்த குடியிருப்பில் மூன்று பேர் இருந்துள்ள நிலையில் இந்ந பாரிய மரம் சாய்ந்துள்ளதாகவும் குடியிருப்பில் இருந்தவர்கள் எவருக்கும் எவ்வித காயங்களும் இடம் பெறவில்லை என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

குடியிருப்புக்கு பகுதி அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் .
 

Leave a Reply