TamilsGuide

ஈரான் தாக்குதல் விவகாரம் - அமெரிக்க செனட்டில் கடும் அரசியல் பிளவு

ஈரான் மீதான ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் இராணுவ நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக ஜனநாயகக் கட்சியினரால் கொண்டுவரப்பட்ட தீர்மானம் அமெரிக்க செனட் சபையில் தோல்வியடைந்தது.

ஈரானுக்கு எதிரான போரை நிறுத்தக் கோரி கொண்டுவரப்பட்ட இந்த 'போர் அதிகாரத் தீர்மானம்' (War Powers Resolution) 52-47 என்ற வாக்கு கணக்கில் தோற்கடிக்கப்பட்டது.

இதன் மூலம், ஈரான் மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கி ஆறு வாரங்கள் கடந்த நிலையிலும், ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கு அவரது குடியரசுக் கட்சிக்குள் பலமான ஆதரவு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

குடியரசுக் கட்சியைச் சேர்ந்த செனட்டர் ராண்ட் போல் (Rand Paul) மட்டுமே கட்சி மாறி இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தார்.

ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த செனட்டர் ஜோன் ஃபெட்டர்மேன் (John Fetterman) தீர்மானத்திற்கு எதிராக (ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கு ஆதரவாக) வாக்களித்த ஒரே ஜனநாயகக் கட்சி உறுப்பினர் ஆவார்.

சமீபத்திய ரொய்ட்டர்ஸ் கருத்துக்கணிப்பின்படி, 60வீத அமெரிக்கர்கள் ஈரான் மீதான இராணுவத் தாக்குதலை எதிர்க்கின்றனர்.

இருப்பினும், குடியரசுக் கட்சியினரில் 74வீதமானோர் அதற்கு ஆதரவளிப்பதாகவும், ஜனநாயகக் கட்சியினரில் 7வீதமானோர்; மட்டுமே ஆதரிப்பதாகவும் தெரியவந்துள்ளது.
 

Leave a comment

Comment