TamilsGuide

பெரியவர்களை மதிக்கும் அந்த மாண்புதான் எஸ்.பி.பி..

ஒரு இசை நிகழ்ச்சியின் போது எஸ்பிபி , பொது மேடையில், பொதுமக்கள் முன்னிலையில், தன்னுடன் பாடிய மூத்த பின்னணி பாடகி இசைக்குயில் பி.சுசீலா அவர்களின் கால்களில் விழுந்து ஆசி
வாங்கினார்.

எஸ்.பி.பி முதலாவதாக பாடிய பாடல் அடிமைப்பெண் என்ற படத்தில் பி.சுசீலாவுடன் பாடிய டூயட் பாடல் " ஆயிரம் நிலவே வா

அடுத்து சாந்தி நிலையம் என்ற படத்தில் அதே பி.சுசீலாவுடன் பாடிய மற்றுமொரு டூயட் பாடல் " இயற்கை எனும் இளைய கன்னி" என்ற பாடலுமாகும்.

எனவே அந்த மரியாதையை நினைவு கூறும் வகையில் எஸ்.பி.பி அனைவரது முன்னிலையில் மேடையில் பி.சுசிலா அம்மாவின் காலில் விழுந்து ஆசி பெற்றார்.

பெரியவர்களை மதிக்கும் அந்த மாண்புதான் எஸ்.பி.பியை சிகரம் தொட வைத்தது. 

Prashantha Kumar
 

Leave a comment

Comment