ஈரானுடன் ரகசிய ஒப்பந்தமா? - கத்தார் அமைச்சகத்தின் அதிரடி விளக்கம்
ஈரானுடன் எவ்வித உடன்படிக்கையும் செய்துகொள்ளவில்லை என கத்தார் வெளியுறவு அமைச்சகத்தின் ஊடகப் பேச்சாளர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
போர் நடைபெற்ற காலம் முழுவதும் கட்டார் மீது ஈரானியத் தாக்குதல்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்ததாக அவர் குறிப்பிட்டார்.
மேலும், போர் நிறுத்தம் அமுலுக்கு வந்த பின்னரே இந்தத் தாக்குதல்கள் நிறுத்தப்பட்டதாகவும், மாறாக இரு நாடுகளுக்கும் இடையே எவ்விதமான இணக்கப்பாடும் எட்டப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஈரானுடன் கத்தார் உடன்படிக்கை செய்துகொண்டதாக வெளியான செய்திகளை நிராகரிக்கும் வகையிலேயே இந்த உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.























