• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சந்தை மீது நைஜீரிய விமானப்படை தவறுதலாக தாக்குதல் - 100க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழப்பு

நைஜீரிய நாட்டு விமானப்படை தங்கள் நாட்டு மக்கள் மீதே நடத்திய தாக்குதல் 100க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் உயிரிழந்தனர்.

நைஜீரியாவின் வடகிழக்கில் போர்னோ மாநில எல்லையருகே யோபே மாநிலத்தில் அமைந்துள்ள கிராமத்தில் சனிக்கிழமை (ஏப்ரல் 11) சந்தையில் மக்கள் கூடியிருந்தனர்.

அங்கு நைஜீரிய விமானப்படையின் போர் விமானங்கள் பயங்கரவாதிகளைக் குறிவைப்பதற்கு பதிலாக தவறுதலாக இந்த சந்தை மீது தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்த தாக்குதலில் சந்தையில் இருந்த குழந்தைகள் உட்பட அப்பாவி பொதுமக்கள் 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர்.

இந்தத் தாக்குதல் ஒரு தவறு என்று நைஜீரிய அரசாங்க அதிகாரிகள் பின்னர் ஒப்புக்கொண்டனர்.

இலக்கை அடையாளம் காண்பதில் எங்கு பிழை ஏற்பட்டது என்பதை நைஜீரிய அரசாங்கம் இன்னும் தெளிவுபடுத்தவில்லை. இதுகுறித்த விசாரணை அறிக்கை எதுவும் வெளியாகவில்லை.

நைஜீரியாவின் வடகிழக்கில் பாதுகாப்புப் படைகளுக்கும் போகோ ஹராம் என்ற ஜிகாதி ஆயுதக் குழுவுக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் நிகழ்கின்றன. மோதலால் பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
 

Leave a Reply