கமல்ஹாசன், எனக்கு ஒரே ஒரு ஆசை தான் நான் நடந்து சென்றால் எல்லோரும் என்னை திரும்பி பார்க்க வேண்டும் அதுவரை சென்னை விட்டு போக மாட்டேன் என்று சொன்னான்.
கமல்ஹாசன் உதவியாளராக இருக்கும்போது தான் அவருக்கு கதை சொன்ன விதம், மற்றும் அவர் ரத்த வாந்தி எடுத்ததபோது தான் என்ன செய்தேன் என்பது குறித்து இயக்குனர் பாரதிராஜா ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் இயக்குனர் இமயம் என்று அழைக்கப்படும் பாரதிராஜா, 1977-ம் ஆண்டு வெளியான 16 வயதினிலே என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அந்த படம் பெரிய வெற்றியை பெற்றிருந்தது. கமல்ஹாசன், ரஜினிகாந்த், ஸ்ரீதேவி, கவுண்டமணி, காந்திமதி உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். படமும் பாடல்களும் பெரிய வெற்றியை கொடுத்தது.
இந்த படத்திற்கு நடிப்பதற்கு முன்பே, கமல்ஹாசன் – பாரதிராஜா இடையே நெருங்கிய நட்பு இருந்தது. இது குறித்து சாய் வித் சித்ரா நிகழ்ச்சியில் பேசிய பாரதிராஜா, தேன் சிந்துதே வானம் என்ற படத்தின்போது தான், நான் கமல்ஹாசனை சந்தித்தேன். அப்போது டான்ஸ் அசிஸ்அடண்டாக இருந்தார். நான் அவனிடம் பேசும்போது, நீங்க யார் என்று கேட்க, நான், அசிஸ்டெண்டாக இருக்கிறேன் என்று சொன்னேன். அப்போது கமல்ஹாசன், எனக்கு ஒரே ஒரு ஆசை தான் நான் நடந்து சென்றால் எல்லோரும் என்னை திரும்பி பார்க்க வேண்டும் அதுவரை சென்னை விட்டு போக மாட்டேன் என்று சொன்னான்.
அவன் சொன்னதை கேட்டு இவனுக்கு இந்த வைராக்கியம் இருக்கும்போது நமக்கு ஏன் இருக்க கூடாது என்று நினைத்தேன். அதன்பிறகு ஒன்றாக வேலை செய்தோம். ஒருநாள் ரத்த ரத்தமாக வாந்தி எடுத்தான் கமல். அப்போது நான் தான் அவனை ஆழ்வார் பேட்டையில் உள்ள அவனது வீட்டுக்கு அழைத்து சென்றேன். அப்போது நாங்கள் ரொம்ப நெருங்கிய நட்பில் இருந்தோம். அப்போ தான் அவனுக்கு நான் கதை சொன்னேன். அதை கேட்டு, கமல், சாரு ஹாசனிடம் கதை சொல்லு என்று சொன்னான். அவரிடம் கதை சொல்லி ஓகே வாங்கிவிட்டேன்.
அதன்பிறகு கமலிடம் சொன்னபோது எங்க அண்ணனுக்கு ஓகே என்றால் எனக்கும் ஓகே என்று சொன்னான். அதன்பிறகு முதல்நாள் ஷூட்டிங் தொடங்கி இன்றுவரை கமல்ஹாசன் எனக்கு மிக நெருங்கிய நண்பன் என்று பாரதிராஜா கூறியுள்ளார். 16 வயதினிலே மட்டும் இல்லாமல், டிக் டிக் டிக், சிகப்பு ரோஜாக்கள், ஒரு கைதியின் டைரி, உள்ளிட்ட படங்களில் பாரதிராஜா இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Kowsalya Tamizhachi


