TamilsGuide

ஒரே படத்தில் இணைந்து நடித்த 5 முதல்வர்கள்

கலைஞர் தயாரிப்பில் எம்.ஜி.ஆர் ஹீரோ; ஒரே படத்தில் இணைந்து நடித்த 5 முதல்வர்கள்: எந்த படம்? எப்போ ரிலீஸ் தெரியுமா?

எம்.ஜி.ஆர் படத்தில் எப்போதும் ஆக்ஷனுக்கு பஞ்சம் இருக்காது. அதேபோல் பெரும்பாலான படங்களை இன்றைக்கு பாத்தோம் என்றாலும் புதுமையான தெரியும்.

தமிழ் சினிமாவிலும் அரசியலிலும் தனக்கென தனி முத்திரை பதித்து இன்றுவரை மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ள மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடித்த ஒரு படத்தில் 5 முதல் அமைச்சர்கள் நடித்துள்ளனர் என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.

வறுமையில் பிறந்து, நாடகத்தில் தனது நடிப்பு திறமையை வளர்த்துக்கொண்டு சினிமாவில் சிறுசிறு வேட்ஙகளில் நடித்து வளர்ந்தவர் தான் எம்.ஜி.ஆர், அதன்பிறகு, 2-வது நாயகனாக பல வெற்றிப்படங்களில் நடித்த அவர், ஒரு கட்டத்தில் சோலோ நடிகராக நடிக்க தொடங்கினார். கமர்ஷியல் படமாக இருந்தாலும் அதில் தனக்கென தனி முத்திரை, மக்களுக்கு தேவையான கருத்துக்கள், கருத்து சொல்லும் வசனங்கள் என மக்கள் சிந்தனையை புகுத்தியவர் தான் எம்.ஜி.ஆர்.

எம்.ஜி.ஆர் படத்தில் எப்போதும் ஆக்ஷனுக்கு பஞ்சம் இருக்காது. அதேபோல் பெரும்பாலான படங்களை இன்றைக்கு பாத்தோம் என்றாலும் புதுமையான தெரியும். அந்த வகையிலான ஒரு படம் தான் எங்கள் தங்கம். 1970ல் எம்ஜிஆர் நடிப்பில் வெளியான வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் எங்கள் தங்கம். இந்த படத்திற்கு ஏகப்பட்ட சிறப்புகள் உள்ளது: எங்கள் தங்கம் படத்தில் தமிழ் சினிமாவின் சூப்பர் ஹிட் ஜோடியான எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் இணைந்து நடித்தனர்.

அதேபோல், எங்கள் தங்கம் படத்தை தயாரித்தது, கலைஞர் கருணாநிதியின் மேகலா பிக்சர்ஸ் நிறுவனம் தான். இந்த படத்திற்கு கதை எழுதியவர் புரசுலிமாரன். எங்கள் தங்கம் படத்தின் ஒரு காட்சியில் எம்ஜிஆருடன் முரசொலி மாறன் நடித்திருப்பார். அதேபோல், அண்ணா, நெடுஞ்சொழியன், கலைஞர் கருணாநிதி ஆகிய மூவரும், ஒரு காட்சியில் நடித்திருப்பார்கள். இந்த படம் எடுத்தப்போது முதல் அமைச்சராக இருந்தவர் கலைஞர் கருணாநிதி.

எங்கள் தங்கம் படம் வெளியாகி அடுத்த 7 வருடத்தில் எம்.ஜி.ஆர் முதல்வராக மாறினார். இதற்கு இடையப்பட்ட காலத்தில், நெடுஞ்சொழியன் இடைக்கால முதலவராக இருந்தார். அதேபோல், 80-களின் இறுதியில் முரசொலி மாறன், மத்திய அமைச்சராக பொறுப்பேற்றிருந்தார். இறுதியாக ஜெயலலிதா தமிழ்நாட்டின் முதல்வர் ஆனார். இப்படி பல தனிச்சிறப்புகள் இந்த படத்திற்கு உண்டு. இந்த படத்தில் எம்.ஜி.ஆர், கருணாநிதி, அண்ணா, நெடுஞ்செழியன், ஜெயலலிதா என 5 முதல்வர்கள் நடித்திருப்பார்கள்.

புகழ்பெற்ற இரட்டை இயக்குனர்களான கிருஷ்ணன் – பஞ்சு இந்த படத்தை இயக்கியிருந்தனர். எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்த இந்த படத்திற்கு, கவிஞர் வாலி அனைத்து பாடல்களையும் எழுதியிருந்தார். சோ இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தது குறிப்பிடத்தகக்து. 

தமிழச்சி கயல்விழி

Leave a comment

Comment