யா/ இராமநாதன் கல்லூரியின் க.பொ.த. உயர்தரத்தில் சித்தியடைந்து, பல்கலைக்கழகம் செல்லும் மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வானது, கடந்த ஆறு வருட காலமாக அமரர் அங்கயற்கண்ணி சிவப்பிரகாசபிள்ளை (ஓய்வுநிலை உப அதிபர்) அவர்களின் ஞாபகார்த்தமாக அவரது மகனார் திரு. சிவப்பிரகாசபிள்ளை சிவநாதன் அவர்களின் அனுசரணையுடன் நடைபெற்று வருகிறது. இம்முறை 2025 ஆண்டு உயர்தரத்தில் சித்தியடைந்து பல்கலைக்கழகத்திற்கு தகுதியான 33 மாணவர்களில் மருத்துவத்துறை, வணிகத்துறைக்கும் கூடுதலான மாணவர்கள் கலைத்துறைக்கும் தெரிவு செய்யப்பட்டுள்ளமை பாராட்டுக்குரியதாகும் . இவர்களை கௌரவிக்கும் நிகழ்வானது 10.04.2026 வெள்ளிக்கிழமை கல்லூரியின் பிரதான மண்டபத்தில் கல்லூரியின் அதிபர் திருமதி அம்பிகை சிவஞானம் அவர்களின் தலைமையில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கதாகும் . இக்குடும்பத்தினருக்கு கல்லூரி சமூகம் தமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது


TamilsGuide
பல்கலைக்கழகம் செல்லும் மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு
