TamilsGuide

மத்திய கிழக்கில் புதிய நகர்வு - ஈரான் ஜனாதிபதியுடன் புடின் தொலைபேசி உரையாடல்

இஸ்லாமாபாத்தில் இடம்பெற்ற அமெரிக்கா - ஈரான் இடையிலான பேச்சுவார்த்தைகள் உடன்பாடு எட்டப்படாத நிலையில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியானுடன் (Masoud Pezeshkian) தொலைபேசி ஊடாகக் கலந்துரையாடியுள்ளார்.

மத்திய கிழக்கில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்குத் தேவையான உதவிகளை வழங்க ரஷ்யா தயாராக இருப்பதாக இதன்போது புடின் தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கில் நிலவும் மோதல்களுக்கு அரசியல் மற்றும் இராஜதந்திர ரீதியிலான தீர்வுகளைக் காண்பதற்கு ரஷ்யா தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கும் என புடின் உறுதியளித்துள்ளார்.

மத்திய கிழக்கில் நீதியான மற்றும் நிலையான சமாதானத்தை எட்டுவதற்கான முயற்சிகளில் ரஷ்யா மத்தியஸ்தராகச் செயற்படத் தயாராக இருப்பதை கிரெம்ளின் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் இழுபறி நிலை நீடிக்கும் சூழலில், ரஷ்ய ஜனாதிபதியின் இந்த அறிவிப்பு சர்வதேச மட்டத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகின்றது.
 

Leave a comment

Comment