TamilsGuide

சர்ச்சைக்குரிய நிலக்கரி விவகாரம் – குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு

2009 ஆம் ஆண்டு முதல் இலங்கைக்கு நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டமை தொடர்பாக முறையான விசாரணைகளை முன்னெடுக்குமாறு கோரி, ஜனாதிபதி செயலாளர் நந்திக்க சனத் குமாநாயக்க இன்று (11) முற்பகல் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்றை சமர்ப்பித்துள்ளார்.

இலங்கைக்கு நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டதில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக கணக்காய்வு அறிக்கைகளிலும், நாடாளுமன்றத்திலும் முன்வைக்கப்பட்டுள்ள விடயங்களைக் கருத்திற்கொண்டு இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

Leave a comment

Comment