TamilsGuide

அடுத்த மாதம் தொடங்கும் புரொடக்ஷன் நம்பர் 23 படத்தின் படப்பிடிப்பு 

பிரபல இயக்குநர் மணிரத்னம் ‘தக்லைஃப்’ படத்தை தொடர்ந்து, தனது அடுத்த படத்தை நடிகர் விஜய் சேதுபதியை வைத்து இயக்குகிறார். இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார். விஜய் சேதுபதியுடன் முதல் முறையாக சாய் பல்லவி இணையும் இப்படத்திற்கு 'புரொடக்ஷன் நம்பர் 23' என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது.

லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் இந்தியா டாக்கீஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளார். படத்தின் கதைகளம், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.

இதனிடையே, 'புரொடக்ஷன் நம்பர் 23' திரைப்படத்தின் படப்பிடிப்பு மே மாதம் 14-ந்தேதி தொடங்கவுள்ளது. முன்னதாக இப்படத்திற்கான விளம்பரப் படப்பிடிப்பு (Promo shoot) இம்மாத இறுதியில் நடைபெறவுள்ளது.

இதனை தொடர்ந்து, வரும் நாட்களில் இப்படத்தின் அப்டேட்கள் அடுத்தடுத்து வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a comment

Comment