TamilsGuide

கனடா லம்ப்டன் கல்லூரி வளாகத்தில் துப்பாக்கிச் சூடு - இளம் ஹாக்கி வீரர் பலி

கனடாவின் ஒன்டாரியோ மாகாணம் சர்னியா பகுதியில் அமைந்துள்ள லம்ப்டன் கல்லூரியின் வளாகத்தில் உள்ள மதுபான விடுதியில், இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மாணவர் நிர்வாகக் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வின் போது, அதிகாலை 1 மணி அளவில் இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், காயமடைந்த நிலையில் மூன்று பேரை மீட்டுளள்னர்.

இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 20 வயதான டேன் நிஸ்பெட் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

உள்ளூர் ஹாக்கி விளையாட்டுக் குழுக்களில் நன்கு அறியப்பட்டவரான இவரது மரணம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏனைய இருவர் ஆபத்தான கட்டத்தைத் தாண்டி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தத் துயரச் சம்பவத்தைத் தொடர்ந்து, லம்ப்டன் கல்லூரியின் பிரதான வளாகம் மற்றும் அதனுடன் இணைந்த அனைத்துப் பயிற்சி மையங்களும் இன்றயை தினம் மூடப்படுவதாக கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.

சர்னியா பொலிஸார் இச்சம்பவத்தை ஒரு திட்டமிட்ட கொலை வழக்காகப் பதிவு செய்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். உயிரிழந்தவர் அல்லது காயமடைந்தவர்கள் அக்கல்லூரியின் மாணவர்களா என்பதை பொலிஸார் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.  
 

Leave a comment

Comment