TamilsGuide

வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பால் – திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிசு உயிரிழப்பு

நாடளாவிய ரீதியில் வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், திருகோணமலை பொது வைத்தியசாலையில் மகப்பேற்றுக்காக அனுமதிக்கப்பட்ட தாயொருவருக்கு சிகிச்சை வழங்குவதில் ஏற்பட்ட கால தாமதமே சிசுவின் மரணத்திற்கு காரணம் என வைத்தியசாலை நிர்வாகத்தின் மீது சிசுவின் குடும்பத்தினர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.

கடந்த எட்டாம் திகதி இரவு, குறித்த தாய் மகப்பேற்று சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எனினும், அவருக்கு உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் குழந்தையின் பிரேதப் பரிசோதனை முடிவுகள் வெளிவர மூன்று மாத காலம் வரை ஆகும் என வைத்தியசாலை தரப்பில் கூறப்பட்டுள்ளதாகத் குடும்பத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.
 

Leave a comment

Comment