பிரித்தானியாவின் ரெட்கார் (Redcar) பகுதியில் நாய் கடித்ததில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார்.
கிளீவ்லேண்ட் (Cleveland) பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டோர்மன்ஸ்டவுன் (Dormanstown) பகுதியில் உள்ள ஹார்டேல் குரோவ் (Hardale Grove) எனும் இடத்தில், நேற்று பிற்பகல் 1:30 மணியளவில் சிறுவன் ஒருவன் நாய் கடிக்கு உள்ளாகியுள்ளாகியுள்ளார்.
சம்பவம் அறிந்த ஆயுதம் ஏந்திய பொலிஸார் மற்றும் அவசரச் சேவைப் பிரிவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தபோது, சிறுவன் ஏற்கனவே உயிரிழந்திருந்தமை உறுதி செய்யப்பட்டது.
தாக்குதலுடன் தொடர்புடைய ஒரு நாய் தெருவிலேயே அதிகாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டதுடன் வீட்டிலிருந்த மற்றொரு நாய் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
தாக்குதலில் காயமடைந்த மற்றுமொரு நபர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் நடந்த இடத்தில் பொலிஸார் குவிக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் தகவல்கள் தெரிந்தவர்கள் பொலிஸாருக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கோரப்பட்டுள்ளனர்.


