• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ரீ-ரிலீஸை ஒட்டி இணையத்தில் வைரலாகும் அமைதிப் படை அரசியல் காட்சிகள்... 

சினிமா

1994-ம் ஆண்டு மணிவண்ணன் இயக்கத்தில் சத்யராஜ், ரஞ்சிதா, கஸ்தூரி, சுஜாதா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் 'அமைதிப்படை'. இப்படத்தை இயக்கிய மணிவண்ணன் அதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

இப்படத்தின் அரசியல் நையாண்டி வசனங்கள், மேடை பேச்சை கடந்து எதார்த்த அரசியல் களம் எப்படி இருக்கிறது என்பதை தோலுரித்த காட்டின. இந்த படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. 32 ஆண்டுகளுக்கு பிறகு ஸ்பேரோ சினிமாஸ் சார்பில் கார்த்திக் வெங்கடேசன், இந்த படத்தை 4K தொழில்நுட்பம் மற்றும் டால்பி ஒலியுடன் மீண்டும் வெளியிடுகிறார்.

‘அமைதிப்படை’ மீண்டும் வெளியாவதையொட்டி சென்னையில் நடந்த படவிழாவில் சத்யராஜ், கஸ்தூரி உள்ளிட்ட நடிகர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில், ரசிகர்களால் பெரும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் ‘அமைதிப்படை’ நாளை முதல் மீண்டும் திரையரங்குளில் வெளியாக உள்ளது. தேர்தல் நேரத்தில் ‘அமைதிப்படை’ மீண்டும் வெளியாவதையொட்டி அப்படத்தில் வரும் காட்சிகளை தொடர்பு படுத்தி சமூக வலைத்தளங்களில் மீம்ஸ்கள் வைரலாகி வருகின்றன. 

Leave a Reply