TamilsGuide

பிரதான வீதியில் குப்பை கொட்டிய 5 வர்த்தகர்களுக்கு நீதிமன்றத்தில் வழக்கு

காத்தான்குடி பிரதான வீதியில் குப்பைகளை வீசிய ஐந்து வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி நகரசபை தெரிவித்துள்ளது.

காத்தான்குடி நகரசபையின் நகர முதல்வர் எஸ்.எச்.எம்.அஸ்பர் , காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஐ.பி.அழககோன் பொலிஸ் உத்தியோகத்தர்கள் , நேற்று இணைந்து மேற்கொண்ட திடீர் கள விஜயத்தின் போது பிரதான வீதியில் குப்பைகளை வீசிய வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நகர சபை தவிசாளர் அஸ்பர் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தின் மிகப்பெரிய வர்த்தக நகரமான காத்தான்குடி நகரை தூய்மையாக வைத்திருக்கும் பல்வேறு நடவடிக்கைகளை நகரசபை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment