கணவர் அ*டித்து கொடுமை படுத்துவதாக போலீஸ் புகாரளித்த முரட்டுகாளை நடிகை
சினிமா
சல்மான் கானுக்கு சொந்தகார பொண்ணுதான் நம்ம Rati Agnihotri...நடிகரான அதுல் அக்னிஹோத்ரி ரதியின் cousin ஆவார் இவர்தான் சல்மான் கானின் தங்கச்சி அல்விரா கானை திருமணம் செய்து இருக்கிறார்.
UP யை சேர்ந்த பஞ்ஜாபி பிராமின் குடும்பம்…இவரை மிகவும் ராசியான நடிகை என்றே சொல்லலாம் காரணம் இவர் முதன் முறை சேர்ந்து நடித்த எல்லா ஹீரோக்களுக்கும் அந்த படம் ஒரு திருப்பு முனையாக அல்லது லக்கி படமாக அமைத்துள்ளது
எனக்கு தெரிந்து மிகவும் சிறு வயதில் அதாவது 10 வயதிலேயே modeling industry கு வந்துவிட்டாராம்…எங்கேயோ இவரை கண்டுபிடித்து இயக்குனர் பாரதிராஜா புதிய வார்ப்புகள் படத்தில் பாக்யராஜுக்கு ஜோடியாக நடிக்க வைத்தார் அந்த படம்தான் இயக்குனராக இருந்த பாக்யராஜுக்கு கதாநாயகனாக வெற்றியை கொடுத்து தொடர்ந்து நடிகனாக பயணிக்க வைத்தது
இவர் அறிமுகமானது 1979 அடுத்த வருடமே இவரின் அழகான அந்த முகம் மற்றும் மெலிவான உடல்வாகு ரஜினி மற்றும்’ கமலையும் கவர்ந்து அடுதவருடமே ரஜினியுடன் முரட்டு காளை மற்றும் அன்புக்கு நான் அடிமை என இரண்டு படத்தில் நடித்தார் கமலுடன் உல்லாச பறவைகள் படத்தில் நடித்தார்
.
ரஜினிக்கு முரட்டுகாளைதான் ஒரு commercial action hero வாக அவரை மாற்றிய அவரின் கரியரில் முக்கியமான படம் என எல்லாருக்கும் தெரியும்
இவர் சினிமாவுக்கு வந்த இரண்டாவது வருடத்திலேயே தெலுங்கில் சிரஞ்சீவியுடன் Punnami Naagu என்ற படத்தில் நடித்தார் அந்த’ படம்தான் சிரஞ்சீவிக்கு அதிக ரசிகர்களை பெற்றுதந்த படம் என்று சொல்வார்கள்
முதல் வருடம் தமிழ் அடுத்தவருடமே telugu அதற்க்கு அடுத்த வருடமே ஹிந்தி என்று busy ஆன நடிகையாக வந்தவர் எனக்கு தெரிந்து இவர் மட்டும்தான் இருப்பார்
.
இவர் 1981 இல் கமலுடன் சேர்ந்து Ek Duuje Ke Liye என்ற ஹிந்தி படத்தில் முதன் முறை நடித்தார் அந்த படம்தான் கமலுக்கு ஹிந்தியில் ஒரு பெரிய அடையாளத்தை வாங்கித்தந்த படம் இவர் கமலுக்கும் ராசியான நடிகையானார்
ஆனால் அந்த படத்தில் ஹிந்திக்கு சென்றவர் அதன்பிறகு ஹிந்தியில் இருந்து வரவே இல்லை
சுமார் 150 படங்களுக்கு மேல் நடித்த இவர் திருமணதிற்கு பிறகு 1988 இல் படத்தில் நடிப்பதை விட்டு குடும்பத்தில் கவனம் செலுத்தினார்
1985-ல் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் மற்றும் கட்டிடக் கலைஞர் அனில் விர்வானி என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.
ரதியின் வாழ்க்கை மிகவும் அமைதியாகச் செல்வதாகவே கருதப்பட்டது. ஆனால் 2015-ஆம் ஆண்டு அவர் வெளியிட்ட தகவல் திரையுலகையே அதிரவைத்தது
2015-ஆம் ஆண்டு தனது கணவர் அனில் விர்வானி மீது ரதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தனது 30 ஆண்டு கால திருமண வாழ்க்கையில் கணவர் தன்னை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் து**றுத்தியதாகத் தெரிவித்தார்
.
தனது மகனின் எதிர்காலத்திற்காகவும், சமூக மதிப்பிற்காகவும் இத்தனை ஆண்டுகள் பொறுத்துக் கொண்டதாக அவர் உருக்கமாகப் பேட்டியளித்தார்
.
நீண்ட போராட்டத்திற்குப் பிறகு 2015-ல் தனது கணவரைப் விவாகரத்து வாங்கி பிரிந்தார்.
இவர் கணவருடன் மனஸ்தாபத்தில் 2000 ஆண்டில் இருந்தே பிரிந்து இருக்கவேண்டும் ஏனென்றால் இவர் 2001 ஆம் ஆண்டு மீண்டும் நடிக்க வந்தார் வந்த முதல் வருடம் நடித்தது தமிழ் படம்தான் மஜ்னு படத்தில் நாயகியின் அம்மாவாக
இவருக்கு தனுஜ் விர்வானி என்ற மகன் உள்ளார். அவரும் தற்போது பாலிவுட்டில் நடிகராகப் பணியாற்றி வருகிறார்.
தற்போது போலந்தில் தனது சகோதரியுடன் இணைந்து உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார்.
Meera Mahadhi





















