கமலஹாசன் தானே திரைக்கதை எழுதிய "அபூர்வ சகோதரர்கள் "! அதுவும் குறிப்பாக அரை மணி நேரம் அந்த படம் அற்புதமான திரை அமைப்பை கொண்டிருக்கும். அந்த அரை மணி நேரம்தான் அந்த படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குகாரணம் என்றுகூடச் சொல்லலாம். அதாவது குள்ளமான அப்பு கமல் திருமணத்துக்காக காரில் ஏறி ரூபினி உடன் செல்ல ஆரம்பித்ததிலிருந்து, தூக்கு போட்டுக் கொள்ளும்போது ஸ்ரீவித்யா காப்பாற்றுவது வரை ஒரு வலுவான கதையை எப்படி திரைக்கதையாக கையாளுவது என்று கமல் பாடமே எடுத்திருப்பார். கமல் ரிஜிஸ்டர் ஆhபீஸில் கையெழுத்திடும் கட்டத்தில் கேமரா அவர் மீது நிற்கும். இதை நான் துளிக்கூட எதிர்பார்க்கவில்லை என்ற ஏமாற்றத்தை கமல் தன் முகபாவத்தில் வெளிப்படுத்துவர். அடுத்த காட்சி ஸ்ரீவித்யா சமாதானம் சொல்ல தன் மகனையே இறக்கி பேசுவார். அப்போது நடிப்பை பலமடங்கு கூட்டுவார் கமல். கமல் மனதில் நடக்கும் மனப்போராட்டம் எதையுமே அறியாத ரூபிணி நாளை நீதான் பாட வேண்டும் என்பார். நல்ல பாடலாக யோசித்துப் பார் .ஒன்ன நெனச்சேன் பாட்டுப் படிச்சேன் என்ற பாடலை அந்த இடத்தில் வைப்பார் கமல்ஹாசன்.ஒரு கைதேர்ந்த டைரக்டர் கூட பட பாடலை எங்கே வைப்பது என்ற விஷயத்தில் தடுமாறுவார்கள். அந்த பாடல்
முடிந்தவுடன் முகமூடி மரத்தில் போய் விழும். அது தூக்கில் தொங்குவது போல் இருக்க தானும் தூக்கில் தொங்கி உயிரை விட்டு விடலாம் என்று முடிவு செய்வார். அப்போது அந்தக் கிளி அவர் பெயரை அப்பு அப்பு என்று சொல்லி ஸ்ரீவித்யாவை எழுப்பி காப்பாற்றும். அப்போது தொடங்கிய அந்த கிளி கமல் உடனே பயணித்துக் கொண்டிருக்கும். கடைசியில் படம் முடிந்த பிறகும் அந்த கிளியின் குரல் கேட்கும் அவ்வளவு நேர்த்தியாக இருக்கும் திரைக்கதை! அந்த சம்பவத்தின் மூலமாக தனது தந்தையை பற்றி தெரியவர கமல் மூன்று வில்லன்களையும் பழிவாங்க ஆரம்பிப்பார். சரியாக ஒவ்வொரு கட்டத்திலும் இன்னொரு கமல் ஆன ராஜா வந்து சேர்வார். திரைக்கதை அவ்வளவு அழகாக அமைத்திருப்பார். அதனால் ஜனகராஜ் ராஜாவை சந்தேகப்பட அந்த சிச்சுவேஷனை வைத்து கிரேசி மோகன் நகைச்சுவை வசனங்களை பின்னி எடுத்து இருப்பார். இளையராஜாவின் இசை எல்லா சம்பவங்களையும் கோர்க்கும் ஒரு மணி போல இருக்கும். கமல்ஹாசன் இளையராஜா கிரேசி மோகன் இந்த அபூர்வ கூட்டணிதான் இந்த அபூர்வ சகோதரர்கள் அபூர்வ வெற்றிக்கு காரணம். பின்னர் கிரேசி மோகன் திறமைக்காக கமல் முழு நீள நகைச்சுவை படமான மைக்கேல் மதன காமராஜன் ஐ எடுத்தார். அங்கும் வலுவான திரைக்கதை, உ
டன் அதே இளையராஜா இசை! தமிழ் சினிமாவில் எந்தப் பாடலிலும் கதை நகராது. ஆனால்மைக்கேல் மதன காமராஜன் படத்தில் "வைக்காம போனாலும் மல்லி வாசம் " பாடலில் திரைக்கதை மூலமாக கதையை நகைச்சுவையாக நகர்த்திக்கொண்டு போவார் கமல்! இந்த இரண்டு படங்களும் தமிழில் மிகச் சிறந்த படங்கள் திரைக்கதையை பொறுத்தவரை. காரணம் கமல்ஹாசன் என்று சொல்லவும் வேண்டுமா!
Kalimuthu Raj


