ஹோர்மோஸ் நீரிணை வழியாக அமெரிக்க எண்ணைக் கப்பல்கள் போக்குவரத்து செய்வதை அனுமதிக்காத ஈரானின் தந்திரோபாயத்திற்கு கிடைத்த வெற்றியாகவே இன்று பாகிஸ்தானின் தரகு நிலையில் ஏற்பட் போர் நிறுதத்தை பார்க்க முடியும்.
அனூல் இதற்கு அப்பால் ஈரான் மக்களின் எதற்கும் தம்மை அர்பணிக்க தயார் என்ற பாதுகாப்பு அரணும் காரணம்.
இது பற்றி இந்த பதிவின் இறுதியில் பார்ப்போம்
முழுவதும் எண்ணை வளத்தை தனதாக்கி கொள்ளும் போர்களே அமெரிக்காவின் வரலாற்றில் முதன்மை பெற்ற யுத்தங்களுக்கு காரணங்கள் ஆகும்.
அது எண்ணை வர்த்தகம் என்றாகவும் அதனை டாலரில் மட்டும் செய்யவேண்டும் என்பதாகவும் இதற்கு அப்பால் உலகில் உள்ள அனைத்து எண்ணை வளங்களும் தங்களுக்கானது என்றான பார்வைதான் காரணம்.
அது ஈராக்கில் ஆரம்பித்து வெனிசுலா என்றாகி கனடாவை தனது இன்னொரு மாநிலமாக அறிவிக்கப் போவதாக அமெரிக்காவின் ட்றம் கூறுவது வரை.
இதற்கு அப்பால் சவூதினால் ஏற்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்ட எண்ணை வர்த்தகத்தை டாலரை தவிர்த்து தமது நாணயத்தில் நடாத்த முன்னெடுப்புகளை மேற்கொண்ட கடாபி காலத்து லிபியாக இருக்கட்டும்....
இன்றைய ஈரான் அவ்வாறு தனது சொந்த நாணயத்தில் வர்த்தகம் செய்தது என்றாக... எல்லாவற்றிக்கும் யுத்தம் ஒன்றுதான் தீர்வு என்றாக அமெரிக்காவின் யுத்த செயற்பாடுகளைப் பார்க்கலாம்.
இதில் வளைகுடா அரச பரம்பரை ஆட்சி நாடுகளில் அமெரிக்காவின் வர்த்தகத்திற்கான போக்குவரத்து என்பது ஹோர்மோஸ் நீரிணை வழியாக இருப்பதனால் அதனூடான அமெரிக்காவின் போக்குவரத்து தடைப்பட்டது என்றாக இந்த எண்ணையை மையப்படுத்திய அமெரிக்காவின் சுரண்டல்கள் தடைப்பட்டதற்கு எதிரான யுத்தமாகவே அமெரிக்காவின் தற்போதைய யுத்தத்தை பார்க்க முடியும்.
இதற்கு ஈரானின் அணு ஆயுதத்தை செய்வதற்குரிய செறிவூட்டப்பட்ட மூலப்பொருள், தொழில் நட்பம் இருக்கின்றன என்ற அமெரிகாவின் புரட்டுகளும்…
ஈராக்கில் அழிவுகளை ஏற்படுத்தும் இராசாயன ஆயுதங்கள் இருக்கின்றன என்ற பொய்மைகளும்…
வெனிசுலாவில் போதை வஸ்து கடத்தல் என்றான ஆதாரமற்ற குற்றச் சவாட்டுகளும்…
இவ்வாறு ஏதாவது ஒரு காரணத்தை தாமாகவே பிரச்சாரப்படுத்தி கட்டமைத்துக் கொண்ட புறப்படுவது அமெரிக்காவின் வழக்கம.
இதனுடன் கூடவே தனது படைகளை தரை வழியே தனியாக நகர்த்தாது அந்த நாடுகளில் தமது கைக்கூலிகளைக் கொண்டு உள்ளுர் கலவரங்களை ஏற்படுத்துவதற்கு வலிந்த திட்டமிட்ட பொருளாதார வீழ்ச்சி நிலைகளை அமெரிக்காவே விதிக்கும் பொருளாதாரத் தடைகள் மூலம் ஏற்படுத்தும்
இதன் பினபு உள்ளுர் கலவரம் என்றாக ஆரம்பித்து அவர்களுக்கு எல்லாவகையிலும் உதவுதல் என்று அரம்பித்து ஆகாய வழித் தாக்குதலை மட்டும் நிகழ்த்தும் வல்லமைதான் அமெரிக்காவின் இந்த எண்ணைத் திருட்டிற்கான திறவு கோல் முறைகள் ஆகும்.
இதில் அமெரிக்கா எதிர்பார்த்த ஈரான் மக்கள் தமக்கு ஆதரவாக பெருவாரியாக செயற்படுவார்கள் என்று புறப்பட்ட யுத்தம் இவ்வளவிற்கு அடிவாங்கும் என்று அமெரிக்கா நினைக்கவில்லை.
இவ்வளவு அடியை உள் நாட்டிற்குள் வாங்குவோம் என்று இஸ்ரேலும் எதிர்பார்க்கவில்லை
உலகில் யூத மக்கள் தமக்கான நாடு என்றாக பெருபான்மையாக அடையாளப்படுத்தி வாழும் இஸரேல் நாட்டை இழக்காமல் பாதுகாத்துக் கொள்ளல் என்றான வாழ்வா சாவில் தோற்றுப் போகாமல் இருப்பதற்கான எல்லா வேலைகளையும் அது தொடர்ந்தும் செய்யும்.
அந்த வகையில் இன்று ஏற்பட்டுள்ள யுத்த நிறுத்தத்தை இஸ்ரேல் இரசிக்காது.
அதனால் எவ்வாறு காசாவில் யார் பேச்சையும் சட்டை செய்யாமல் பொது மக்களை கொன்று குவித்தார்களோ அதனையே ஈரானுக்குள் எவ்வாறு செய்யலாம் என்பதையே இந்த யுத்த நிறுத்த காலத்தில் மிகத் தீவிரமான திட்டமிடல் காலமாக பாவிக்கவே இஸ்ரேல் செலவிடும்.
அமெரிக்கா இஸ்ரேலைத் தவிர எனைய நாடுகளின் கப்பல் போக்குரத்தை அனுமதித்தது அமெரிக்காவிற்கு பெருத்த ஏமாற்றம். அதனால்தான் அமெரிக்கா இஸ்ரேல் தவிர்ந்த பலரும் மூடிய நீரிணையை திறக்க போர்புரிய வாருங்கள் என்ற அமெரிக்காவின் போர் கூவலை சட்டை செய்யவில்லை.
அது அமெரிக்காவிற்கு கடைத்த பெருத்த ஏமாற்றம்தான்.
எனைய நாடுகள் தமக்கான பாதை திறந்திருப்பதாக உணர்ந்ததினால் இது ஏற்பட்டது.
இதற்கு அப்பால் இந்த நாடுகளை அமெரிக்கா கடந்த பல வருடங்களாக பெரிய அண்ணன் போர்வையில் நடாத்திய அவமானங்களுக்கு ‘பழி தீர்க்கும்’ சந்தர்பத்தை பார்த்திருந்து அவர்கள் தற்போது பயன்படுத்தியதாக உணர முடிகின்றது.
அமெரிகாதான் உலகம் முழுவதும் தனது இராணுவத் தளங்களை அமைத்து வைத்திருக்கின்றது. ஏனைய நாடுகள் பொதுவாக இவ்வாறு செய்யவில்லை.
இந்த யுத்தத்தின் அமெரிக்காவின் சகபாடி இஸ்ரேல் கூட அவ்வாறு இல்லாத சூழலில்….?
இவ்வாறு அமெரிக்காவிற்கு வெளியே உள்ள நாடுகளில் உள்ள அமெரிகள் தளங்களை ஈரான் தனது இராணுவ இலக்காக வைத்து தாக்கியதில் அதிகம் இழப்பை தோல்விகளை அவமானத்தை சந்தித்து என்னமோ அமெரிக்காதான்.
இதனை தனது இராணுவத் தளங்கள் மீதான தாக்குதலாக கட்டமைப்பதை மறுத்து அந்த நாடுகள் மீதான தாக்குதலாக அமெரிக்கா கட்டமைக்க முயன்றதிலும் தோற்றுப் போய்விட்டது.
இந்த வகையில் வேறு நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவ இலக்குகள் மீதான தாக்குதல், ஹோர்மோஸ் நீரிணை போக்குவரத்து தடை, ஈரான் மீது தாக்குதலுக்கு வந்த அமெரிக்காவின் கடல் ஆகாய அசுரர்களை உலகம் எதிர்பாராத அளவிற்கு அடித்து நொறுக்கியது சுட்டு வீழ்தியது என்றாக அமெரிக்காவின் இராணுவப் பலம் உலக மக்களால் கேள்விக் குறியாகி இருக்கின்றது.
இந் நிலையில் இன்று இரவு ஈரான் அடிபணியாது விட்டால் 2ம் உலக போரில் யப்பானின் அணுக்குண்டு போட்டது போன்ற அழிவுகளை அமெரிக்க ஈரானில் செய்வேன் என்ற மிரட்டல் வந்து கொண்டிருந்து
அது ஈராக்கில் இரு தடவையும் சேர்பியாவில் நேட்டோ படைகளும் செய்த அழிவுகளை போன்று அமெரிக்கா இஸ்ரேல் இணை;நது செய்யலாம் என்று உலகம் எதிர்பார்த்து இருந்தது.
அது மனிதகுலத்தின் அத்தியாவசிய தேவையாக இன்று முதன்மை பெற்றிருக்கும் ஒரு நாட்டின் மிசசாரக் கட்டுமானத்தை முழுமையாக அழித்தல் என்றாக அழிவுகளை ஈரானில் ஏற்படுத்த இருந்த தாக்குதல் இந்த பொர் நிறுத்தத்தால் தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது…?
மிக அதிளவு தண்டவாளங்கள் உடைய ஈரானின் புகையிரதக் தண்டவாளங்களில் மின்சாரம் செலுத்தி பொது மக்களுக்கு ஆபத்து விளைத்தல் என்றாக....
ஒலி அதிர்வலைகள் கதிர்களை பரப்பி மக்கள் மீது செயற்கையான வெப்பத்தை ஏற்படுத்தல் என்றாக...
இவற்றை தடுப்பதில் மகள் சமூகமாக இணைந்து...
இதற்குள் ஒரு மக்கள் போராட்டம் அது மின் உற்பத்தி இடங்களை லட்சக்கணக்கான மக்கள் சூழந்து காப்பாற்ற முயலும் ஈரான் மக்களின் தாய்நாடு மீதான பற்றும் வீரமுமெ இன்று வென்றுள்ளது.
இது வீழ்ந்து விடாத மனித குலத்தின் வீரம்தான் அது இன்று ஈரான் மக்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
Siva Murugupillai


