• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மார்ச் மாதத்தில் சரிந்த இங்கிலாந்தின் சராசரி வீட்டு விலைகள்

இலங்கை

ஈரான் போரின் விளைவுகளால் அடமானக் கடன் வட்டி விகிதங்கள் உயர்ந்து, தேவை குறைந்த காரணத்தினால் கடந்த மார்ச் மாதத்தில் இங்கிலாந்தின் சராசரி வீட்டு விலைகள் 0.5 சதவீதம் சரிந்ததாக ஹாலிஃபேக்ஸ் (Halifax) தெரிவித்துள்ளது. 

மோதல் தொடங்குவதற்கு முன்பு பெப்ரவரியில் ஏற்பட்ட 0.3% உயர்வை இந்த வீழ்ச்சி தலைகீழாக மாற்றியுள்ளது.

இந்த சரிவுக்கு அமைவாக இங்கிலாந்தில் தற்போது வீடென்றின் விலையானது 299,677 பவுண்டுகளாக உள்ளது.

அதேநேரத்தில், 2026 பெப்ரவரியில் 1.2 சதவீதத்தில் இருந்த சொத்து மதிப்புகளின் வளர்ச்சியும், கடந்த மார்ச் மாதத்தில் 0.8 சதவீதமாக வீழ்ச்சி கண்டதாகவும் இங்கிலாந்தின் மிகப்பெரிய வீட்டுக் கடன் வழங்கும் நிறுவனமான ஹாலிஃபேக்ஸ் குறிப்பிட்டுள்ளது.

ஈரானில் தொடரும் மோதல் காரணமாக எரிசக்தி விலைகள் கடுமையாக உயர்ந்ததைத் தொடர்ந்து இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. 

இதனால், மின்கட்டணங்கள் முதல் வீட்டுக் கடன்கள் வரை அனைத்தும் விலை உயர்ந்து, இந்த ஆண்டு வட்டி விகிதக் குறைப்புக்கான நம்பிக்கைகளுக்கும் தடை ஏற்பட்டுள்ளது.
 

Leave a Reply