TamilsGuide

இஸ்தான்புல்லில் இஸ்ரேலிய தூதரகத்திற்கு அருகே துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் பரப்ரப்பு 

இஸ்தான்புல்லில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்திற்கு அருகே அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த துப்பாக்கிசூட்டு சம்பவத்தில் இரண்டு காவல்துறை அதிகாரிகள் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன .

செவ்வாயன்று இஸ்தான்புல்லில் உள்ள இஸ்ரேலிய தூதரகக் கட்டிடத்திற்கு அருகே துப்பாக்கிச் சூடு வெடித்ததில் மூன்று துப்பாக்கிதாரிகள் கொல்லப்பட்டனர் மற்றும் இரண்டு காவல்துறை அதிகாரிகள் காயமடைந்தனர்.

இந்தச் சம்பவம், நகரின் லெவென்ட் வணிகப் பகுதியில் உள்ளூர் நேரப்படி மதியம் 12:15 மணியளவில் நிகழ்ந்தது. தூதரகத்திற்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக துருக்கிய அரசு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டது.

துப்பாக்கிச் சத்தம் எதிரொலித்தபோது, ​​ஆயுதம் ஏந்திய அதிகாரிகள் பதுங்கிக் கொள்வதை அந்தக் காணொளிக் காட்சிகள் காட்டின.

மோதலின் போது மூன்று துப்பாக்கிதாரிகளும் கொல்லப்பட்டதாகவும், அவர்களில் இருவர் சகோதரர்கள் என்றும் துருக்கிய உள்துறை அமைச்சர் முஸ்தபா சிஃப்ட்சி X தொலைக்காட்சியில் உறுதிப்படுத்தினார்.

சந்தேக நபர்கள் இஸ்மித்திலிருந்து வாடகை வாகனத்தில் இஸ்தான்புல்லுக்கு வந்ததாகவும், அவர்களில் ஒருவருக்கு மதத்தைச் சுரண்டும் ஒரு அமைப்புடன் தொடர்பு இருந்ததாகவும், மற்றொருவருக்கு போதைப்பொருள் தொடர்பான முந்தைய குற்றப் பதிவு இருந்ததாகவும் சிஃப்ட்சி மேலும் தெரிவித்தார்.

"இஸ்மித்திலிருந்து வாடகை வாகனத்தில் இஸ்தான்புல்லுக்கு வந்த நபர்களில், மதத்தைச் சுரண்டும் ஒரு அமைப்புடன் தொடர்புள்ள ஒருவர் அடங்குவது கண்டறியப்பட்டுள்ளது;

மேலும், சகோதரர்களான இரண்டு பயங்கரவாதிகளில் ஒருவருக்கு போதைப்பொருள் தொடர்பான குற்றப் பதிவு இருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது," என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஈரான் - இஸ்ரேல் போருக்கு மத்தியில் இஸ்ரேலிய தூதரகத்திற்கு அருகே இடம்பெற்ற இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a comment

Comment