TamilsGuide

LiK படத்தில் நடிக்க எஸ்.ஜே. சூர்யா வாங்கியுள்ள சம்பளம்.. 

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக தற்போது உயர்ந்துள்ளார் பிரதீப் ரங்கநாதன். இவர் நடிப்பில் வெளிவந்த லவ் டுடே, டிராகன் மற்றும் Dude ஆகிய மூன்று திரைப்படங்களும் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தன.

இவர் நடிப்பில் அடுத்ததாக வெளிவரவிருக்கும் திரைப்படம் LiK. இப்படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா, க்ரித்தி ஷெட்டி, சீமான், கௌரி ஜி. கிஷன், ஆனந்த்ராஜ் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், ஏப்ரல் 10ஆம் தேதி ரிலீஸாகும் இப்படத்தை திரையரங்கில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

LiK திரைப்படத்தில் வில்லனாக நடித்திருப்பவர் நடிகர் எஸ்.ஜே. சூர்யா. தென்னிந்திய அளவில் மிரட்டலான வில்லனாக பல திரைப்படங்களில் இவர் நடித்து வருகிறார். இந்த நிலையில், LiK திரைப்படத்தில் நடிப்பதற்காக எஸ்.ஜே. சூர்யா ரூ. 10 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை பிரபல பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment