TamilsGuide

LIK படத்தின் பூக்கட்டும் பாடல் வெளியானது!

கோமாளி மூலமாக இயக்குநராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன், லவ் டுடே, டிராகன், ட்யூட் படங்கள் மூலம் கதாநாயகனாக நல்ல வரவேற்பை பெற்றுள்ளார்.

இப்படங்களை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அவர் நடிப்பில் வெளியீட்டுக்கு தயாராகி வரும் படம் எல்ஐகே (LIK).

இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, கிரித்தி ஷெட்டி, சீமான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரெய்லர் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியானது.

செவன் ஸ்டுடியோ ஸ்கீரின் ஸ்டுடியோ தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். பலமுறை தள்ளிப்போன நிலையில், இப்படம் வரும் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் பூக்கட்டும் பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி உள்ளது. 

Leave a comment

Comment