TamilsGuide

ரஷ்யாவுடனான எண்ணெய் ஒப்பந்தம் நிறைவு - ஏப்ரல் நடுப்பகுதியில் இருந்து விநியோகம்

ஏப்ரல் மாத நடுப்பகுதியில் இருந்து நாட்டிற்கு ரஷ்ய எண்ணெய் விநியோகத்தைத் தொடங்குவது தொடர்பாக இலங்கை, மொஸ்கோவுடன் ஒரு உடன்பாட்டை எட்டியுள்ளது.

இந்த தகவலை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க ரஷ்ய செய்திச் ச‍ேவையான டாஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

அந்த தகவலில் அமைச்சர்,

இன்று எரிசக்திக்கு நாங்கள் முன்னுரிமை அளிக்கிறோம். 

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதல், எரிசக்தி விநியோகத்தில் சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது. 

ரஷ்யாவின் பிரதி எரிசக்தி அமைச்சர் சில நாட்களுக்கு முன்பு இலங்கைக்கு வருகை தந்தார்.

ரஷ்யாவின் பிரதி வெளிவிவகார அமைச்சரும் இலங்கைக்கு வருகை தந்துள்ளார். 

அவர்களின் வருகையுடன் இலங்கைக்கு எண்ணெய் வழங்குவது தொடர்பாக ஒரு உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

அதன்படி, ரஷ்யாவின் இலங்கைக்கான முதல் எண்ணெய் விநியோகங்கள் ஏப்ரல் மாதத்தின் நடுப்பகுதியில் எதிர்பார்க்கப்படுகிறது.

நிறுவன அளவில் தொழில்நுட்பப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

மேலும் பரிவர்த்தனைகளை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்த நிதி விவகாரங்கள் விவாதிக்கப்பட்டு வருகின்றன. 

எனினும், அரசியல் மட்டத்தில், ஏறக்குறைய அனைத்துப் பணிகளும் முடிந்துவிட்டன – என்றும் கூறினார்.
 

Leave a comment

Comment