TamilsGuide

ஹோர்முஸ் நீரிணை பழைய நிலைக்குத் திரும்பாது - ஈரான் அதிரடி

ஹோர்முஸ் நீரிணை பழைய நிலைக்குத் திரும்பாது என்று ஈரான் எச்சரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் ஆரம்பமானதிலிருந்து ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியிருந்தது.

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்காவிட்டால், ஈரானின் பாலங்கள், எரிசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்துவதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் எச்சரித்திருந்தார்.

இந் நிலையில் ஹோர்முஸ் நீரிணை குறிப்பாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு போருக்கு முந்தைய பழைய நிலைக்கு திரும்பாது என எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Comment